லாகூர்

வுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், அவர் மகள் மரியம் நவாஸ் மற்றும் உறவினரான யூசுஃப் அப்பாஸ் ஆகியோர் மீது சவுத்ரி சர்க்கரை ஆலை பணப்பரிவர்த்தனையில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.  இந்த வழக்கில் உடல்நிலை காரணமாக நவாஸ் ஷெரிஃப் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

இந்த வழக்கு பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு என நவாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இன்று சவுத்ரி சர்க்கரை ஆலை சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் நவாஸ் ஷெரிஃப் கைது செய்யப்பட்டார்.  இதை அறிந்த அவர் மகள் மரியம் நவாஸ் மற்றும் உறவினர் யூசுஃப் அப்பாஸ் ஆகியோர் அவரை சிறைக்குச் சென்று சந்தித்தனர்.

சிறையில் இருந்து இருவரும் திரும்பும் போது தேசிய ஊழல் பாதுகாப்புப் படையினர் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.  தற்போது மூவரும் லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.