’பேட்ட’ பட வில்லன் நவாசுதீன் சித்திக்-கிற்கு எம்மி விருது…!

உலகில் உள்ள சிறந்த தொலைக்காட்சித் தொடர்களை பரிசீலித்து தேர்வு செய்து எம்மின் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாட்டில் நடைபெறும். அதேபோல் இவ்வருடம் 47 வது சர்வதேச எம்மி விருது வழங்மும் விழா அமெரிக்காவில் நடைபெற்றது.

இந்தியாவில் தயாரான வெப் சீரீஸ்களான ’லஸ்ட் ஸ்டோரீஸ் ’மற்றும், ’சீக்கிரெட் கேம்ஸ் ’ஆகிய இரண்டு தொடர்களும் பரிந்துரைக்கபட்டன. நடிகை ராதிகா ஆப்தே சிறந்த நடிகைக்கான விருதில் நாமினேட் ஆகி இருந்தார் .விருதுகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட இந்தப் போட்டியில் பரிந்துரைப்பட்டதே பெருமைப்படத்தக்கதாகும்.

இதில் ’பேட்ட’ பட வில்லனாக நடித்த நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்திருந்த பிரிட்டன் தொடரான மெக்மாஃபியாவுக்கு சிறந்த டிராமா சீரிஸுக்கான விருது வழங்கப்பட்டது.