சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல் – தமிழக வீரர் பலி
சென்னை-
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவை சேர்ந்த சங்கர் என்பவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் மத்திய பாதுகாப்புப்படையில் பணியாற்றி வந்தார்.
நேற்று சுக்மா என்ற பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்ஸலைட்டுகள் அவர்கள்மீது திடீர் தாக்குதல் நடத்தி 12 பேரையும் கொன்றுள்ளனர்.
இதுமட்டுமல்லாது மத்திய பாதுகாப்புப் படையினர் வைத்திருந்த ஆயுதங்களையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தமிழகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரும் நக்ஸல் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 12 வீரர்களில் ஒருவராவார்.
இவருக்கு எழிலரசி (32) என்ற மனைவியும் பூவிழி (2) என்ற மகளும் தர்ஷன் (7 மாதம்) என்ற மகனும் உள்ளனர். இவர் 2000 ம்
ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். அவில்தாராக இருந்தவர். இன்று அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் என தெரிகிறது.