திருவள்ளூர்

சென்னை அருகே உள்ள திருவள்ளூரில் நடந்த காவல்துறை விசாரணையில் செவிலியர் மற்றும் பெயிண்டர் என்னும் பெயரில் ஊடுருவல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை அருகே உள்ள திருவள்ளுரை அடுத்த ஒதப்பை என்னும் கிராமத்தில் சமீபத்தில் நக்சலைட்டுகள் தங்கியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.   அதையொட்டி காவல்துறையினர் திருவள்ளூர் – பூண்டி சாலையில் வாகனத் தணிக்கை நடத்தியதில் ஷேர் ஆட்டோவில் வந்த நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர்.   அவர்கள் தசரதன், அவர் மனைவி சென்பகவல்லி மற்றும் தசரதனின் சகோதரர் வீரபாண்டியன் ஆகியோர் ஆவார்கள்.

இந்த மாதம் 10ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர்களை காவல்துறை புழல் சிறையில் அடைத்தாது.    கடந்த 21 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின்படி இவர்கள் காவல்துறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.   விசாரணையின் போது தசரதனும், அவர் மனைவியும்  பெயிண்டர் மர்றும் செவிலியர் என்னும் பெயரில் தமிழகத்தில் ஊடுருவியது தெரிய வந்துள்ளது.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இது போல பல நக்சலைட்டுகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.    இதையொட்டி ஏற்கனவே இவர்கள் தங்கி இருந்த புதுக்கோட்டை மற்றும் திருச்சிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.    அங்குள்ள மற்ற நக்சலைட்டுகளைக் கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்