ஐந்து நாட்களுக்கு பின் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட நடிகை நயா ரிவெரா உடல்….!

--

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் தன் 4 வயது ஜோஸியுடன் படகில் சவாரி செய்துள்ளார் நடிகை நயா ரிவெரா.

மூன்று மணி நேரங்களுக்கு பிறகு, ஏரிக்கு நடுவே நயா எடுத்துச் சென்ற படகில் அவரது மகன் ஜோஸி மட்டும் தனியாக உறங்கிக் கொண்டிருந்ததை இன்னொரு படகில் சென்ற ஒருவர் பார்த்துள்ளார். அந்த நபர் ஜோஸியை மீட்டு போலீஸிடம் ஒப்படைத்துள்ளார்.

போலீஸ் விசாரணையில், தன் தாய் நயா தண்ணீரில் நீந்தியதாகவும், அவரால் மீண்டும் படகுக்கு வரமுடியவில்லை என்றும் ஜோஸி கூறியுள்ளார். இதனால் பிரு ஏரியில் நயாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

முதல் இரண்டு நாட்களாக நயாவை தேடியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை என்பதால் காணாமல் போய்விட்டார் என்று காவல்துறை அறிவித்தது. இதனை அடுத்து தற்போது காணாமல்போன நடிகையில் உடல் கண்டுகெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட உடல் நடிகை ரிவேராவின் உடல்தான் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.