‘ஃப்ரான்கன்ஹூட்’, ‘க்ளீ’, ‘மேட் ஃபேமிலீஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நயா ரிவெரா.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் தன் 4 வயது ஜோஸியுடன் படகில் சவாரி செய்துள்ளார் .
மூன்று மணி நேரங்களுக்கு பிறகு, ஏரிக்கு நடுவே நயா எடுத்துச் சென்ற படகில் அவரது மகன் ஜோஸி மட்டும் தனியாக உறங்கிக் கொண்டிருந்ததை இன்னொரு படகில் சென்ற ஒருவர் பார்த்துள்ளார். அந்த நபர் ஜோஸியை மீட்டு போலீஸிடம் ஒப்படைத்துள்ளார்.
போலீஸ் விசாரணையில், தன் தாய் நயா தண்ணீரில் நீந்தியதாகவும், அவரால் மீண்டும் படகுக்கு வரமுடியவில்லை என்றும் ஜோஸி கூறியுள்ளார். இதனால் பிரு ஏரியில் நயாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நயா கிடைக்காததால் அவர் காணாமல் போனதாக போலீஸார் அறிவித்துள்ளனர்.
தேடுதல் பணி நடந்து கொண்டிருப்பதால் பிரு ஏரியில் படகு சவாரி செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.