‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நயன்தாரா….!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது . ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், நயன்தாரா இன்று படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் பிரதிக் பாபர் நடிப்பதாக கூறப்படுகிறது.