Random image

ஆகஸ்டு 17ந்தேதி வெளியாகிறது நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’

யன்தான பிரதான கேரக்டரில் நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் ஆகஸ்டு 17ந்தேதி உலகம் முழுவதும் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் கடந்த ஜூலை மாதம் 6ந்தேதி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா – யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள  படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தை  சுருக்கமாக கோகோ என்றும் அழைக்கட்டு வருகிறது.

இந்த படத்தில்  நயன்தாரா பிரதான வேடத்தில் போதை மருந்து  கடத்தும் பெண்ணாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன்  குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் படத்தை வெளியிடும் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.