‘நெற்றிக்கண்’ இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் சோனம் கபூர்…!

2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘ப்ளைண்ட்’. க்ரைம் த்ரில்லரான இந்தப் படம், தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

தமிழில் மிலிந்த் ராவ் இயக்க, நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘நெற்றிக்கண்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இந்தியிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்படுகிறது. முக்கிய பாத்திரத்தில் சோனம் கபூர் நடிக்கிறார். ஷோமி மகிஜா இந்தப் படத்தை இயக்குகிறார்.