இயக்குநர் விக்னேஷ் சிவனும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே . அவர்களும் அவ்வப்போது ரொமான்டிக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் என பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர் .

சமீபத்தில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா இருவரும் தனி விமானம் மூலம் கேரளா சென்று ஓணம் கொண்டாடினர் .

விக்னேஷ் சிவன், அவரது தாயார் மற்றும் நடிகை நயன்தாரா தற்போது கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு அவரது காதலியான நடிகை நயன்தாரா பர்த்டே சப்ரைஸ் அளித்துள்ளார். அழகான கேக் மற்றும் இசை குழுவுடன் வீட்டை பல வண்ண விளக்குகளுடன் அலங்கரித்துள்ளார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.