அப்பு இயக்கவுள்ள புதிய மலையாள படத்தில் நயன்தாரா ஒப்பந்தம்….!

2019-ம் ஆண்டு நிவின் பாலியுடன் ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற படத்தில் நடித்திருந்தந்தை அடுத்து அப்பு இயக்கவுள்ள புதிய மலையாள படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் குஞ்சாகோ போபன், நயன்தாரா இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் 12 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஆண்டோ ஜோசப், அபிஜித் எம்.பிள்ளை, படுஷா, ஃபெலினி மற்றும் ஜினிஷ் ஜோஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் கதையை சஞ்சீவ் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவாளராக தீபக் டி.மேனன், இசையமைப்பாளராக சூரஜ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.