காதலருடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய நயன்தாரா…

 

தமிழில் நம்பர் ‘ஒன்’ நடிகையாக திகழும் நயன்தாரா, சினிமா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் குடி இருந்து வரும் இந்த ஜோடி, உலகம் முழுவதும் ஒன்றாகவே சுற்றி வருகிறார்கள்.

அண்மையில் ஐதராபாத்தில் நடந்த அன்னாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற நயன்தாரா, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், சென்னை திரும்பினார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை நயன்தாரா, சென்னையில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

தமிழில் அன்னாத்த, நெற்றிக்கண், காத்து வாக்கில ரெண்டு காதல் ஆகிய இரண்டு படங்கள் நயன்தாரா கைவசம் உள்ளன.

மலையாளத்தில் நிழல் மற்றும் பாட்டு ஆகிய இரு படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.

– பா. பாரதி