இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நயன்தாராவின் இந்த பிரமாண்ட ஏற்பாட்டில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டுள்ளனர்.

பார்ட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோக்களை பார்த்தவர்கள் நயன்தாரா மாதிரி ஒரு காதலி கிடைக்க விக்னேஷ் சிவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த பிறந்தநாளுக்குள் நயன்தாராவின் கணவராகிவிட வேண்டும் என்று ரசிகர்கள் விக்கியை வாழ்த்தியுள்ளனர்.

நாளை நடக்கும் பிகில் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொள்ளப் போகிறார். நண்பன் அட்லிக்காக தனது கொள்கையை தளர்த்தியுள்ளார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.