சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த மார்ச் 23-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி,

நயன்தாரா நல்ல நடிகை ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சீதாவாக நடிக்கவேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவார்கள். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம். அதற்கு நேர்மாறாக இருப்பவர்களும் நடிக்கலாம்” என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கிவும் செய்தார்.

தன்னைப் பற்றிய எந்த விஷயத்துக்குமே வாய் திறக்காத நயன்தாரா, அந்தச் சமயத்தில் மட்டும் மிகப்பெரிய அறிக்கையை வெளியிட்டார். உச்ச நீதிமன்றம் சொன்னதைப் போல விசாகா குழு வழிகாட்டுதல்களின்படி துறைக்குள் விசாரணையைத் தொடங்குவீர்களா?” என கேட்டிருந்தார்.

நயனின் இந்தக் கேள்வியைக் கேட்டுப் நடிகர் சங்கம், உடனடியாக ராதாரவிக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இப்படி தனக்குப் பிரச்சினை வந்தபோது நடிகர் சங்கத்தை உரிமையாகக் கேள்வி கேட்ட நயன்தாரா, ஜூன் 23 அன்று நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. இந்த முறை மட்டுமல்ல, கடந்த முறை (2015) நடைபெற்றத் தேர்தலிலும் வாக்களிக்கவில்லை.

நயன்தாரா மட்டுமின்றி த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நடிகைகளும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.