‘நிழல்’ மலையாள பட நாயகனின் மகனை கொஞ்சி மகிழும் நயன்தாரா…..!

நயன்தாரா தற்போது நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் ‘நிழல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் கேரளாவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த படத்தை பிரபல எடிட்டர் அப்பு பட்டதரி இயக்குகிறார். இது இவரது முதல் படமாகும். இந்தப் படம் திரில்லராக தயாராகி வருகிறது என்று டைரக்டர் அப்பு பட்டதரி கூறியுள்ளார் .

இரு தினங்களுக்கு முன் படப்பிடிப்பை பார்ப்பதற்காக குஞ்சாக்கோ போபனின் மனைவி பிரியாவும், அவரது 3 வயது மகன் இஷாக்கும் சென்றிருந்தனர்.

படப்பிடிப்பு இடைவெளியில் இஷாக்கை நயன்தாரா கொஞ்சி மகிழும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .