தென்னிந்திய சினிமாவில் அதிகம் விரும்பப்படும் கதாநாயகியான நயன்தாரா நடித்துள்ள “மூக்குத்தி அம்மன்” படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இது தவிர “காத்து வாக்கில ரெண்டு காதல்” மற்றும் “நெற்றிக்கண்” ஆகிய இரு படங்களும் அவர் கைவசம் உள்ளன.

இந்நிலையில், “நிழல்” என்ற மலையாளப் படத்தின் ஷுட்டிங்கில் நயன்தாரா இப்போது ‘பிஸி’யாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொச்சி மற்றும் ஆலப்புழை பகுதியில் முழுமூச்சில் நடந்து வருகிறது.

அப்பு பட்டாத்திரி என்ற அறிமுக இயக்குநர் டைரக்ட் செய்யும் ‘நிழல்’ திரைப்படம் திரில்லர் ரக திரைப்படம் ஆகும். இந்த படத்தில் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக நடிக்கிறார், நயன்.

இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது. இதற்கு முன் இருவரும் ‘மல்டி ஸ்டார்’ படமான “TWENTY.. TWENTY” படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார்கள்.

கேரள கடற்கரையில் நடந்து வரும் ‘நிழல்’ பட ஷுட்டிங்கில் நயன்தாரா பங்கேற்ற காட்சிகள் குறித்த வீடியோ அங்கு வைரலாக பரவி வருகிறது.

இசின் காஷ் என்ற குழந்தை நட்சத்திரம், முக்கிய வேடத்தில் நடிக்கும் ’நிழல்’ திரைப்படம் அவளை சுற்றியே பின்னப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

– பா. பாரதி