சிரஞ்சீவி படத்தில் வில்லன் மனைவியாக நயன்தாரா..

சிரஞ்சீவி படத்தில் வில்லன் மனைவியாக நயன்தாரா..

மலையாளத்தில் மோகன்லால் நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘’லூசிபர்’’ படம் தெலுங்கில் தயாராகிறது.

சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை நம்ம ஊர் மோகன்ராஜா டைரக்டு செய்கிறார்.

அவர், இயக்கும் இரண்டாவது தெலுங்குப்படம் இது.

சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தில் மோகன்ராஜா உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்..

’லூசிபர்’ தெலுங்கு படத்தை சிரஞ்சீவியின் நண்பர் என்.வி.பிரசாத்துடன்,  இணைந்து ராம்சரண் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அல்ல.

இந்தப்படத்தில் நயன்தாரா, வில்லன் மனைவியாக நடிக்கிறார்.

-பா.பாரதி