கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா நயன்தாரா….?

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது .படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் திரைபிரபலங்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதில் உண்மையில்லை என்று நயன்தாராவின் மக்கள் தொடர்பாளர் குழு தெரிவித்துள்ளது.

கடைசியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா பின் வெளியே எங்கும் செல்லாமல் தனி மனித விலகலை கடைபிடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதே போல் நெட்ஃபிளிக்ஸ் குறும்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் விக்னேஷ் சிவன், அந்த பணிகளை கூட அலுவலகத்தில் இருந்தவாறே செய்து வருவதாக கூறப்படுகிறது .

You may have missed