விஜய் 63 படத்தின் நாயகி நயன்தாரா

--

சென்னை

நடிகர் விஜய் யின் 63 ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

இந்த வருடம் தீபாவளிக்கு வெளியான சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். இந்தப்படத்தின் தயாரிப்பளர் கல்பாத்தி அகோரம். ஏற்கனவே விஜய் – அட்லி இணைப்பில் தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரு வெற்றிப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்த புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது விஜய் நடிக்கும் 63 ஆவது படம் என்பதால் விஜய் 63 என குறிப்பிடப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இவரை தவிர வேறு கதாநாயகிகளும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படத்தின் பாடல்களை விவேக் எழுதுகிறார். இந்தப் படம் விளையாட்டை மையமாகக் கொண்டது எனவும் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. சென்னையில் வரும் ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.