பிரபுதேவா இயக்கும் படத்தில் இணையும் நயந்தாரா.,

கொரோனா ஊரடங்கால் திரையுலகம் ஸ்தம்பித்திருக்கிறது, டி.வி படப்பிடிப்புகளை 60 பேர்களுடன் தொடங்கலாம் என்று அரசு அனுமதி வழங்கிய போதிலும் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. சினிமா படப்பிடிப்பு தொடங்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை விட்டும் கண்டுகொள்ளப் படவில்லை. ஜூலை மாதம் கூட அதற்கு ஆகலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் அடுத்தடுத்த படங்களுக்கான திட்டமிடல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.


கொரோனா லாக் டவுனில் பசும்பொன் தேவரின் வாழ்க்கை படமாக ’தேசிய தலைவர்’ என்ற பெயரில் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் பிரபுதேவா இயக்கும் புதிய படத்தில் நயந்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஐசரி கணேஷ் தயரிப்பில் ’கருப்புராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தை இயக்க உள்ள தாகவும் அதில் கார்த்தி, விஷால் நடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது அறிவிப் போடு நிற்கிறது. அந்த படத்தை மீண்டும் பிரபு தேவா இயக்க கையிலெடுத்திருக்கிறாராம். இதில் கார்த்தி நடிகிறார். விஷாலுக்கு பதில் வேறு நடிகர் நடிக்க உள்ளார். இப்படத்தில்தான் நயந்தாரா நடிக்க உள்ளதாககோலிவுட்டில் பேசப்படுகிறது.