சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நயன்தாராவின் சமீபத்திய புகைப்படம்…!

சிறுத்தை சிவா இயக்கத்ததில் உருவாகி வரும் ரஜினிகாந்த்தின் தலைவர் 168 படத்தில் நயன்தாராவுடன் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் மற்றும் சூரி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர் .

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. தலைவர் 168 திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் கலனிதி மாரன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி இம்மான் இசையமைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, நயன்தாரா ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் காணப்பட்டுள்ளார். நீல நிற போல்கா-புள்ளியிடப்பட்ட மேக்ஸி ஆடையைத் அணிந்து வந்த அவருடன் அவரது ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதியும் உடனிருந்துள்ளார் .

இவர்கள் இருவரும், ரஜினிகாந்தின் தலைவர் 168 படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றனர் என கூறப்படுகிறது. இதனிடையே விமான நிலையத்திலிருந்து நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.