நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது….!

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலண்ட் ராவ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் . இது நயன்தாராவின் 65வது படம் .

இந்த படத்திற்கு ’நெற்றிக்கண்’ என்ற டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.

த்ரில், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.