சூலத்துடன் அம்மன் கோலத்தில் செல்பி போஸ் தந்த நயன்தாரா.. நெட்டில் வைரல்..

--

நடிகை நயன்தாராவை ரஜினி, விஜய், அஜீத்துடன் கவர்ச்சி ஹீரோயினாக பார்த்த ரசிகர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு சோலோ ஹீரோயினாக அதிரடி பாத்திரங்களில் ரசித்தனர். இந்த பாத்திரங்கள் எல்லாமே அவரது இமேஜை மேம்படுத்துவதாக அமைந்ததே தவிர அவர் எதிர்பார்த்த ஈடுபாட்டை ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை என்று எண்ணினார்.


இந்நிலையில், ’நீங்கள்தான் அம்மன்’ என்று என்று இயக்குனரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி சொன்னதும் இன்ப அதிர்ச்சி அடைந்தார் நயன்தாரா. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்,
அம்மன் வேடம் என்றால் அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது, விரதம் இருக்க வேண்டும். அந்தநிலைக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள அவகாசம் கேட்டார். சரியான நேரம் அமைந்ததும் அம்மன் வேடத்தில் நடிக்க தயார் என்று சொன்னார். இதையடுத்து ஆர் .ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற பாத்திரமாகவே மாறினார். அம்மன்போல் கிரீடம், ஜரிகைபட்டு சேலை, ஆபரணங்கள் அணிந்து கையில் திரிசூலத்துடன் வந்தார். அவருக்கு வணக்கம் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி ஒரேயொரு செல்பி என்றார். சிரித்தபடி கையில் சூலத்துடன் போஸ் தந்தார் நயன்தாரா. அது நெட்டில் வைரலானது.

மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா வின் அம்மன் தோற்றத்தில் வேறுசில போஸ்களையும் ஆர் ஜே பாலாஜி வெளியிட்டி ருக்கிறார். இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது.