கலர்ஸ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 தொகுத்து வழங்குகிறாரா நயன்தாரா ….!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா தொடர் வெற்றி படங்களை அளித்து வருகிறார்.

இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியான ரியாலிட்டி ஷோ பிக் பாஸில் நயன்தாரா, பங்கேற்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டதால் அந்நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம், வேறு பிரபலத்தை வைத்து நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாம்.

மேலும், பிக் பாஸ் சீசன் 3 விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யபடாமல், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கலர்ஸ் டிவியில் விரைவில் நயன்தாராவை காணலாம், அநேகமாக நயன்தாராவை வைத்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக பரவலாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.