நயன்தாராவின் புகைப்படமே விக்னேஷ் சிவன் தான் எடுத்ததாம்…!

அனைத்து பண்டிகைகளையும் ஜாதி மத பேதமின்றி கொண்டாடுபவர் நயன்தாரா.

தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாராவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகின. அதைத் தொடர்ந்து புத்தாண்டுக் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கடற்கரையில் அவர் எடுத்த புகைப்படங்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.

தற்போது மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் நயன்தாரா சுசீந்திரம் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று வந்தார்.

ஆனால் அவரது புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் இடம்பெறவில்லை. அதேபோல் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிலும் நயன்தாரா மட்டுமே கலந்து கொண்டார். இதைக் கவனித்த சிலர் இருவருக்குள்ளும் மனக்கசப்பு இருப்பதாகவும், திருமணத்துக்கு விக்னேஷ் சிவன் வற்புறுத்தியதால் நயன்தாரா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல்களைப் பரப்பினர்.

இந்நிலையில் இதுகுறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இது முற்றிலும் பொய் என்று மறுத்தனர். நயன்தாராவின் புகைப்படமே விக்னேஷ் சிவனால் எடுக்கப்பட்டது தான் என்றும் கூறப்பட்டது. பட வேலைகளில் இருப்பதால் சமீபத்தில் ஜீ தொலைக்காட்சி விருது நிகழ்ச்சிகளிலும் விக்னேஷ் சிவன், நயன்தாரா உடன் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.