கோவாவில் விடுமுறை கொண்டாடும் நயன்தாரா-விக்னேஷ் சிவன்…..!

இயக்குநர் விக்னேஷ் சிவனும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே . அவர்களும் அவ்வப்போது ரொமான்டிக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் என பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர் .

சமீபத்தில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா இருவரும் தனி விமானம் மூலம் கேரளா சென்று ஓணம் கொண்டாடினர் .

தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கோவாவுக்கு குடும்பத்துடன் சென்றிருப்பதாக தெரிகிறது.

கோவாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், “கட்டாய விடுமுறை நாட்களிலிருந்து விடுமுறை மனநிலைக்கு வந்திருக்கிறோம். நிஜமாகவே மிக மிக நீண்ட நாட்கள் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.