விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கி வருகிறார்
இந்தப் படத்தில் வரும் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் நயன்தாரா. இந்தக் காட்சிகள் படமாக்கும் போது நயன்தாராவுக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படம் 2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.