நடிகரின் குழந்தையை தூக்கி வைத்து நயன்தாரா கொஞ்சும் புகைப்படங்கள்..

 

நடிகை நயன்தாரா தனது 36 வது பிறந்த நாளை அண்மையில் கேரளாவில் குடும்பத்துடன் கொண்டாடினார்.

இப்போது ‘நிழல்’ என்ற மலையாள படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக குஞ்சன் சாக்கோ நடிக்கிறார். முதன் முறையாக இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது.

இந்த படத்தின் ‘ஸ்கிரிப்ட்’ கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளதால், அந்த வேடத்தில் நடிக்க நயன்தாராவை பரிந்துரை செய்தவர், சாக்கோ தான்.

கொச்சியில் நடந்த ‘நிழல்’ ஷுட்டிங்கில், படக்குழுவினர் முன்னிலையில் ‘கேக்’ வெட்டி நயன்தாரா, தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடன் சேர்ந்து சாக்கோவும் ‘கேக்’ வெட்டினார். அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு குஞ்சன் சாக்கோவின் மனைவி பிரியா, தனது ஆண் குழந்தை இசாக்குடன் வந்திருந்தார்.

குழந்தையை பார்த்ததும் பரவசம் அடைந்த நயன்தாரா, இசாக்கை தூக்கி தனது தோளில் வைத்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தார்.

இசாக்கை நயன்தாரா கொஞ்சும் புகைப்படங்களை குஞ்சன் சாக்கோ தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்கள் அங்குள்ள வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

– பா. பாரதி