லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ள ‘ஆயிரா’ மார்ச்சில் வெளியீடு.. புகைப்படங்கள்

யக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஆயிரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது மேலும் பல படங்களை படக்குழு வினர் வெளியட்டு உள்ளனர்.

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்க தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில், அவர் நடித்து வரும் ஆயிரா படத்தின் போஸ்டர்கள், டீசர் போன்றவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரில்லர்  படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் முக்கிய கதாபாரத்தில் கலையரசன், யோகிபாபு நடித்து வருகின்றனர். படத்தில நயன்தாரா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு கதாபாத்திரத்தில் கறுப்பான நிறத்தில், வித்தியாசமான தோற்ற்த்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படமும் பிரமாண்ட வெற்றி பெறும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தினை ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இயக்குனர் சார்ஜுனின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்திற்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி கேஎஸ் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சர்ஜுன், ஆயிர படத்தின் கேரக்டர் ரசிகர்களை ஈர்க்கும் என்று கூறி உள்ளார். படம் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed