மார்ச் 28ந்தேதி வெளியாகிறது நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ள ‘ஆயிரா’

யக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி  உள்ள ஆயிரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போதுபடம் வெளியாகும் தேதியை படக்குழு வினர் அறிவித்து உள்ளனர்.

நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்துள்ள, ‘ஐரா’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 28ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கருப்பு நயன்தாராவிற்கு கணவராக கலையரசன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் போன்றவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இரண்டு வேடங்களில் நடித்துள்ள நயன்தாரா,  ஒரு கதாபாத்திரத்தில் கறுப்பான நிறத்தில், வித்தியாசமான தோற்ற்த்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இயக்குனர் சார்ஜுனின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்திற்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி கேஎஸ் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

படம் மார்ச் 28ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.