நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ படத்திற்குத் தடை…!

இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருந்த கொலையுதிர் காலம் இன்று வெளியாக இருந்த நிலையில், டைட்டில் பிரச்சனை காரணமாக இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை சுஜாதாவின் மனைவியிடம் இருந்து ரூ.10 லட்சம் ரூபாய்க்கு தனது அம்மாவின் பெயரில் விடியும் முன் புகழ் இயக்குனர் பாலாஜி குமார் வாங்கியுள்ளதாகவும், உரிமம் பெற்றுள்ள கொலையுதிர் காலம் என்ற டைட்டிலில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்றும் கூறி இந்த டைட்டிலில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இப்படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டதோடு, வரும் 21ம் தேதிக்குள் இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kolaiyuthir kalam, nayanthara, title issue
-=-