நடிகைகளின் பாலியல் தொல்லைகளை புகாரளிக்க புது குழு…..!

திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீபகாலமாக பல நடிகைகள் மீ டூ என்ற பெயரில் வெளிப்படையாக புகார் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், மீ டூ ஒருங்கிணைப்பு குழு ஒன்றை நடிகர் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கார்த்தி, பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பூ, ரோஹினி, சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் உள்ளிட்ட 8 பேர்களை உறுப்பினர்களாகவும் நியமித்துள்ளனர்.

நடிகைகள் தங்களுக்கு யார் மூலமாக பாலியல் தொல்லை ஏற்பட்டாலும், இந்த குழுவில் புகார் அளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.