சென்னை

சென்னை செண்டிரல் ரெயில் நிலையத்தில் ஒரு பயணியிடமிருந்து 3.1 கிலோ கோகெய்ன் என்னும் போதைப்பொருள் பிடிபட்டது.   இதன் மதிப்பு சுமார் ரூ,10 கோடி ஆகும்.

சென்னை செண்டிரலில் இருந்து டில்லிக்கு செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புத்துறை சோதனை நடத்தினார்கள்.   அப்போது மிஜோராம் மாநிலத்தை சேர்ந்த விஷால் (வயது 27) என்பவரிடமிருந்து 3.1 கிலோ கோகெய்ன் என்னும் போதை மருந்து பிடிபட்டது.  இதன் மதிப்பு சுமார் ரூ. 10 கோடி ஆகும்.  இதை ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் டில்லியில் உள்ள ஒருவருக்கு தருமாறு கொடுத்து அனுப்பியதாக விஷால் கூறினார்.

அதை பரிசோதித்ததில் அது கலப்படமற்ற சுத்தமான கோகெய்ன் என்பதும்,  அது தென் அமெரிக்காவில் தயாராவது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  போதைமருந்து தடுப்புத் துறையை சேர்ந்த அதிகாரி, புரூனோ, “விஷால் ஒரு தென் அமெரிக்க போதை கடத்தல் கும்பலுக்கு வேலை செய்வதாக தெரியவருகிறது.   அவருடைய சென்னை மற்றும் டில்லி தொடர்புகளை கண்டறிய விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

கடந்த மாதம் ஜூன் மாதம் போதை மருந்து தயாரிக்கும் தொழிற்காலை ஒன்று சென்னை செங்குன்றத்தில் உள்ளது கண்டுபிடிக்கபட்டு அங்கிருந்து ரூ.71 கோடி மதிப்புள்ள போதை மருந்து பிடிபட்டது தெரிந்ததே.