சுஷாந்த் தற்கொலை வழக்கில் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூரிடம் விசாரிக்க முடிவு….!

--

சுஷாந்த் சிங் மரண வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் சுஷாந்தின் காதலி ரியாவையும், அவரது சகோதரர் ஷௌவிக்கையும், சுஷாந்தின் தனிப்பட்ட உதவியாளர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட ஒரு சிலரையும், போதை மருந்தை வாங்கியது மற்றும் எடுத்துச் சென்ற குற்றங்களுக்காக போலீஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது இது தொடர்பாக சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஃபேஷன் டிஸைனர் சைமன் கம்பட்டா ஆகியோரிடமும் அடுத்த வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.