ஏர்செல் திவால் மனுவுக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்  ஒப்புதல்

மும்பை

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஏர்செல் அளித்த திவால் மனுவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மொபைல் சேவை ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டு நன்கு நடந்து வந்தது.   பிறகு போட்டியாளர்கள் அதிகரிக்கவே அந்த நிறுவனம் சிறிது சிறிதாக வியாபாரத்தை இழந்தது.   தற்போது தங்கள் கம்பெனி திவால் ஆகி விட்டதாக அறிவிக்கும் படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் மனு ஒன்றை ஏர்செல் அளித்தது.

தீர்ப்பாயம் தற்போது ஏர்செல் அளித்த திவால் மனுவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.   அதை ஒட்டி அந்த கம்பெனியின் தலைவர், நிர்வாக இயக்குனர், இயக்குனர்கள் உட்பட அனைத்து தலைமை அதிகாரிகளும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் நிறுவனம் கணக்கு வழக்குகளை முடிக்க ஒரு தற்காலிக அதிகாரியை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.   நிறுவனம் இன்னும் முழுமையாக சேவைய நிறுத்தாததால் தற்காலிக அதிகாரியை இன்னும் அமைக்கவில்லை எனவும் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த உடன் அதிகாரி நியமிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி