மகளிர் ஆணையம் நோட்டீஸ்: கமலுக்கு அடுத்த சிக்கல்

கமல்ஹாசன் (அவ்வை சண்முகி திரைப்படத்தில்..)

நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், “அந்த நடிகையின் பெயரைச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. வேண்டுமானால் நீங்கள் “திரௌபதி” என்று பெயரிட்டுக்கொள்ளுங்கள்” என்று கமல் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறது.

ஏற்கெனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து கடும் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கும் நிலையில் கமலுக்கு அடுத்த பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.