ராகுல் காந்திக்கு எதிராக வயநாட்டு தொகுதியின் பாஜக போட்டியாளர் விவரங்கள்

யநாடு

ராகுல் காந்தியை எதிர்த்து கேரளாவின் செல்வந்தர்களில் ஒருவரும் ஏழவா சமுதாய பிரதிநிதியுமான துஷார் வெள்ளப்பள்ளி பாஜக கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

ராகுல் காந்தி போட்டியிட உள்ள கேரள மாநில வயநாடு தொகுதியில்  சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் உள்ளன.   எனவே ராகுல் காந்திக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.   அத்துடன் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் செல்வாக்கு உள்ளதால் இது ராகுல் காந்திக்கு பாதுகாப்பான தொகுதி எனவும் சொல்லப்படுகிறது.

பாஜகவின் கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி (என் டி ஏ)யில் பாரத தர்ம ஜன சேனை என்னும் கட்சி உள்ளது.   இந்த கட்சியின் முக்கிய தலைவரான துஷார் வெள்ளப்பள்ளி ராகுல் காந்திக்கு எதிராக பாஜக கூட்டணியால் அறிவிக்கப்பட்டுள்ளார்.    துஷார் கேரளாவின் செல்வந்தர்களில் ஒருவரும் பிரபல மது வர்த்தகரும் ஆவார்.

இவர் கேரளாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பான ஏழவா வகுப்பை சேர்ந்தவர் ஆவார்.   இவரது கட்சியான பி டி ஜே எஸ் கட்சி இந்த சமுதாய மக்களுக்காக மிகவும் பாடுபட்டு வருகிறது.   வயநாடு தொகுதி வாக்காளர்களில் சுமார் 14% க்கும் அதிகமானோர் ஏழவா வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  அவர்களின் வாக்குகளை கவர துஷார் நிறுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.