ndian trains smash records in running late, 800% jump in number of trains arriving more than 15 hours late

 

மத்திய ரயில்வேயின் நிர்வாகம் மிக மோசமான நிலைக்கு சரிந்திருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. Trainsuvitha.com என்ற இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு விவரங்கள், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொது சேவை என்ற பெருமையைப் பெற்ற இந்திய ரயில்வேயின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதையை எடுத்துக் காட்டுகிறது.

 

பொதுவாக ரயில்கள் நிலையங்களுக்கு வந்து சேருவதில் ஏற்படும் தாமதம் சராசரி 15 மணி நேரமாக அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது கடந்த 4 ஆண்டுகளில் ரயில்களின் தாமதமாவது, 800 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கடைசி (2014 ஜனவரி – மார்ச்) மூன்று மாதங்களில் காணபபட்ட நிலையில் இருந்து, ரயில் போக்குவரத்தின் நேரக்கட்டுப்பாட்டு தரம் 800 விழுக்காடு சரிந்துள்ளதாக அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

 

அதுமட்டுமின்றி, மோசமான ரயில் விபத்துகளும் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தூர் – பாட்னா இடையே நிகழ்ந்த ரயில் விபத்தில் 150 பேர் பலியானதை அந்த ஆய்வு இதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டுகிறது.

 

மத்திய ரயில்வே நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவை, அதன் அமைச்சர் சுரேஷ் பிரபு ஏற்றுக்கொண்டுள்ளார். 2016ஆம் ஆண்டு மத்திய ரயில்வேக்கு மோசமான ஆண்டு என்று கூறும் அவர், ரயில்வேயின் மொத்த வருவாயில் ரூ14 ஆயிரம் கோடி குறைந்துள்ளதாக கூறியுள்ளார். அதே நேரத்தில் ரயில்வே தொடர்பான மானியம் ரூ 33 ஆயிரம் கோடியாக உள்ளதையும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

 

ரயில்வே துறைக்கென்று தனியாக போடப்பட்ட பட்ஜெட்டை ஒழித்துக் கட்டியது மட்டும்தான் மோடி அரசு செய்த சாதனை என்கின்றனர், பொருளாதார விமர்சகர்கள்.

 

இந்தியாவின் தனிப்பெரும் நிர்வாக அடையாளமாக காணப்பட்ட ரயில்வே துறை நலிவடைவது நாட்டுக்கு நல்லதல்ல எனவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். நாம் என்ன செய்ய…?