என்டிடிவி தடை: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

--

கொல்கத்தா: என்டிடிவி-க்கு மத்திய அரசு ஒருநாள் தடை விதித்தது எமர்ஜென்சி சூழல் போல உள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

mamata

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், என்டிடிவிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அதிர்ச்சியளிக்கிறது, பதான்கோட் தாக்குதல் குறித்து அந்த சேனல் ஒலிபரப்பிய நிகழ்ச்சியில் மத்திய அரசுக்கு பிரச்சனைகள் இருந்தால் அதை அணுக பல்வேறு வழிகள் உள்ளன அதை விடுத்து தடை விதித்தது நாட்டில் எமர்ஜென்சி விதிக்கப்பட்டது போன்ற ஒரு சூழலைக் காட்டுகிறது.

பதான்கோட் தாக்குதல் குறித்து என்டிடிவி இந்தி செய்தி சேனல் அளித்த செய்தி ஒன்றில் தகவல் ஒளிபரப்பு விதிமுறைகளை மீறி தேவையற்ற இராணுவம் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்டதாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அந்தச் சேனல் மீது ஒரு நாள் தடை விதித்திருந்தது. அதன்படி வரும் நவம்பர் 9-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் இச்சேனல் எந்த ஊடகத்திலும் ஒளிபரப்பாகாது. இதுபோல ஒரு சேனலுக்கு ஒருநாள் தடை விதிக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை ஆகும்.

இதற்கு விளக்கமளித்துள்ள என்டிடிவி, நாங்கள் புதிதாக எதையும் வெளியிடவில்லை, ஏற்கனவே சமூகவலைதளங்களிலும், அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பகிரப்பட்ட செய்தியைத்தான் நாங்களும் பகிர்ந்தோம் என்றும் பதிலளித்திருந்தது.
முந்தைய செய்திகள்:
என்டிடிவி ஒளிபரப்பு தடை ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது! பத்திரிக்கை ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்

மோடிக்கு ஜால்ரா போடாத சேனல்களுக்கு தடையா? கெஜ்ரிவால் ட்வீட்