குமாரபாளையம்:
சேலம், நாமக்கல் அருகே உள்ளது  குமாரப்பாளையம். இங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு முதியவர் ஒருவர் வ்ந்தார். பார்ப்பதற்கு  சாய்பாபா உருவ சாயலில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கோணப்புள்ளா மேடு பகுதியில் சாய்பாபா கோவில்  உள்ளது.
saibaba
வாராவாராம் வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு சிறப்பான பிரார்த்தனை நடைபெற்று வருவது வாடிகை.  இந்த கோவிலுக்கு அழுக்குப் படிந்த உடைகளை அணிந்துகொண்டு தாடி மீசை வளர்ந்த நிலையில் பெரியவர் ஒருவர் திடீரென வந்திருந்தார். இதை பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர்.
அவர் கோவிலின் ஒரு பகுதியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்த்ர்.  பார்ப்பதற்கு பாபாபோல  தோற்றத்திலும், அவரை போல வேட்டி அணிந்தும் இருந்ததால்,  அவரை பார்த்த பக்தர்கள் பாபாதான் கோயிலுக்கு வந்துள்ளார் என பேசத் தொடங்கினர்.
இதையடுத்து பக்தர்கள் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க காத்திருக்க தொடங்கினர். தியானத்தை முடித்த பெரியவர்,  ஆசி வாங்க வந்த பக்தர்களிடம்   கைகளை நீட்டி ஆசி வழங்கினார்.
இந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது.  இதன் காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பார்ப்பதற்கு பாபா போல தோற்றமளித்தால், இவரே பாபாவின் மறு உருவம் என கருதி ஆண்கள், பெண்கள் அனைவரும் அந்த பெரியவருக்கு மாலை அணிவித்து தலையில் பூக்களைப்போட்டு சாஸ்டங்கமாக காலில் விழுந்து வணங்க தொடங்கினர்.
ஒரு சிலர் அருள் வாக்கு கேட்க தொடங்கினர்.  ஆனால், அந்த முதியவர்  ஒருசிலரிடம் மட்டுமே பேசினார். மற்றவர்களிடம் எதுவும் பேசவில்லை. ஒருசில பக்தர்கள்  வீட்டில் இருந்து உணவு வககைள், பழங்கள் போன்றவற்றை எடுத்து வந்து அவருக்கு கொடுத்தனர்.
இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.