வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 1,66,408 பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 1,66,408 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு  தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிப்ரவரி மாதம் 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதை தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் செப்டம்பர் 20ம் தேதி வரை 5,51,408 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் புதிதாக பெயர் சேர்க்க 1,66,408 பேரும், பெயர் நீக்க 2,37,248 பேரும் விண்ணபித்துள்ளனர்.

தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்டு மாதம் இணையம் மூலமாக சரி பார்த்த போது, தமிழகத்தில் 56,000 இரட்டை பதிவுகள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளது. அவற்றை தற்போது கணினி மூலமாகவும் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யும் என்றார்.