லக்னோ:

மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியை திணிக்கும் வகையில் அனைத்து மாநிலங் களுக்கும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த நினைக்கும் வேளையில், இந்தி பேசும் மாநிலமான  உத்தரப்பிரதேசத்தில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தி போர்டு பரீட்சைகளில் தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சுமார் 20சதவிகிதம் மாணவ மாணவிகள் இந்தி வாரிய தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

10வது வகுப்பில் 5.74 லட்சம் மாணவர்களும், 12ம் வகுப்பு தேர்வில் 1.93 லட்சம் மாணவர்களும் இந்தி வாரிய தேர்வில் தேர்ச்சி  பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர பள்ளி பாடத்துடன் உள்ள இந்தி ஜெனரல் தேர்வில், 2.40 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும் மொத்தத்தில் 9லட்சத்துக்கு 97ஆயிரத்து 948 பேர் இந்தியில் தேர்ச்சிபெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.