மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை கணக்கில் சேர்க்கப்படுகிறதா கொரோனா எண்ணிக்கை?

சென்னை:
சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து அந்த எண்ணிக்கை சென்னையின் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி சென்னையில் 1, 322 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த எண்ணிக்கை 38,305 ஆக இருந்தது, ஆனால் திடீரென்று அதன் பிறகு 38,365 ஆனது, எவ்வாறு மாவட்ட கணக்கில் திடீரென்று 60 சேர்க்கப்பட்டது என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஜூன் 20-ஆம் தேதியும் அதே போல் நடந்துள்ளது 1, 254 கொரோனா நோயாளிகளுடன் மொத்தம் 39,619 ற்கு பதிலாக 39,657 என்று கணக்கிடப்படுள்ளது. எந்தவிதமான விளக்கமும் இல்லாமல் 38 பெயர் சேர்க்கப்பட்டிருந்தனர்.ஜூன் 21-ம் தேதியும் இதேபோல் நடந்திருந்தது, தொடர்ந்து மூன்று நாட்கள் ஜூன் 19, 20, 21 தேதிகளில் இவ்வாறு நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்த கூடியதாக இருந்தது.


ஜூன் 20- ஆம் தேதி படி மொத்தம் 12 மாவட்டங்களில், 79 கொரோனா நோயாளிகள் இருந்தனர், ஆனால் அதிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 7, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 பேரும் சேர்க்கப்படிருந்தனர். எந்த மாவட்டத்தில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்து இப்படி மற்ற மாவட்டத்தில் சேர்க்கின்றனர் என்று பார்க்கும்போது தான் தெரிந்தது, சிவகங்கையின் மொத்த எண்ணிக்கையில் 17 குறைந்திருந்தது, மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 25-ம் ராணிப்பேட்டையில் 9-ம் குறைந்திருந்தது.

உள்நாட்டு நோய் என்று கூறிய சில கொரோனா எண்ணிக்கை திடீரென்று வெளிநாட்டிலிருந்து வந்தது என்று கூறப்பட்டு ரயில்வே கண்காணிப்பில் பட்டியல்டப்பட்டது.

ஜூன் 21ம் தேதி கண்காணித்ததில், மொத்தம் 46 லிருந்து 38 பேர் சென்னை கணக்கில் சேர்க்கப்பட்டு இருந்தனர், மேலும் செங்கல்பட்டில் நான்கு திருப்பத்தூரில் 2, வேலூர் மற்றும் கோயம்புத்தூரில் தலா ஒன்று சேர்க்கப்பட்டிருந்தது. இந்த முறை சிவகங்கை கணக்கிலிருந்து 25-ம் நாகப்பட்டினத்திலிருந்து 18- ம் நீக்கப்பட்டிருந்தது.  மேலும் இதனை உற்று நோக்கியபோதுதான், இது தற்போது அல்ல மே மாதத்திலிருந்தே நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவந்தது.

இதை நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது தான் சில விஷயங்கள் தெரியவந்துள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார், இப்போது சிவகங்கையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றால், ஒருவேளை அவர் சென்னையிலிருந்தோ வேறு ஏதாவது ஒரு மாவட்டத்திலிருந்தோ வந்தவராய் இருந்தால் அவர் அந்த மாவட்டத்தின் கணக்கில் சேர்க்கப்படுகிறார்.., என்று அவர் கூறியுள்ளார். இதனை கண்காணிக்கவே நாங்கள் ஒரு குழு அமைத்துள்ளோம். ஆனால் தற்போது மும்பையில் இருந்து ஒருவர் இங்கு வந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதென்றால் அவரை மும்பை கணக்கில் சேர்த்து விடுவீர்களா என்று கேட்காதீர்கள் அவ்வாறு செய்யப்படமாட்டாது அவர் தமிழ்நாடு கணக்கிலேயே சேர்க்கப்படுவார் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இவ்வாறு செய்வது தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி , அவர் வந்த இடத்தில் இருந்து மற்ற யாருக்கெல்லாம் பரவியது என்று பார்ப்பதற்கு எளிதாக இருக்கும் என்றும் தமிழ்நாடு சுகாதார துறை அதிகாரி கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி