நாடு முழுவதும் 8.57 கோடி கொரோனா பரிசோதனைகள் நிறைவு: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 8.57 கோடி கொரோனா பரிசோதனை மாதிரிகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 200 நாடுகளை கடந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா பெருந்தொற்று. இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

கொரோனா தொற்றை விரைந்து கண்டறிந்து, பரவாமல் தடுக்கும் நோக்க, கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒரே நாளில் 11,64,018 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

அதன் மூலம், ஒட்டுமொத்த மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 8,57,98,698 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறி உள்ளது.