முதல்வருடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் சந்திப்பு

சென்னை,

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர்.

கடந்த 14 நாட்களாக நெடுவாசல் பகுதியில், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த விளைவதை கண்டித்து அப்பகுதி மக்கள்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  இன்று காலை நெடுவாசல் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்  தட்சிணாமூர்த்தி  தலைமையில் பத்துபேர் கொண்ட நெடுவாசல் போராட்டக் குழு பிரதிநிதிகள் சென்னை வந்தனர்.

அவர் இன்று  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவல கத்தில்  சந்தித்து பேசினர். அப்போது  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

விவசாய நிலங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும்  திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், அதற்காக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுத்தனர்.