கேளிக்கையும் வேண்டும்: கேரளாவில் பஃப்கள் திறப்பது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்:

கொஞ்சம் கேளிக்கையும் வேண்டும் என்று கூறியுள்ளார், கேரள முதல்வர் பினராயி விஜயன்,  கேரளாவில் பஃப்கள் திறப்பது குறித்து கேள்விக்கு அவர் இவ்வாறு சுவாரஸ்யமாக பதில் கூறி உள்ளார்.

ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள பெங்களுரு, சென்னை, நொய்டா உள்பட பல மாநிலங்களில் பஃப் எனப்படும் கேளிக்கை விடுதிகள் செயல்படுகின்றன. இங்கு அரசு அனுமதி பெற்று, மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வாரம் 5 நாட்கள் கடுமையான மனஅழுத்தத்தில் பணிபுரியும் ஐடி நிறுவன ஆண் மற்றும் பெண் ஊழியர்கள், வார விடுமுறை நாட்களின்போது, பஃப் களுக்கு சென்று, மது அருந்திவிட்டு, ஆடிப்பாடி தங்களது மன அழுத்தத்தை போக்கி வருகின்றனர்.

இந்த பஃப்கள் மூலம் கலாச்சார சீரழிவு மதுபோதைக்கு அடிமையாதல்,  பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருவதால், பல இடங்களில் இந்த பஃப்களுக்கு எதிராக குரல்கள் ஒலிக்கத்தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், கேரளாவிலும் பஃப் தொடங்குவது குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்று மாநில முதல்வர் கூறி உள்ளார்.

இதுகுறித்த கேள்விக்கு பதில் தெரிவித்தவர்,  கொஞ்சம் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்க்கை என்ன? என கேள்வி எழுப்பியவர், அனைத்து வேலைகளும், கேரள மக்களுக்கு சரியாக பொருந்தாது என்று  நம்புவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 30 நிமிடம் ஒளிபரப்பப்படும்  ‘நாம் முனூத்து’  (‘Naam Munoottu’- நாங்கள் ஆர்வமாக உள்ளோம்) என்ற நிகழ்ச்சியில், பேசிய பினராயி விஜயன்,   கேரளாவில் பப்களைத் திறப்பது குறித்து பரிசீலிப்பதாக முதலமைச்சர் கூறினார்,

“பம்ப் என்று அழைக்கப்படும் விஷயங்கள் என்ன? பப்ஸ்?, என்று சிரித்த முகத்துடன் கேள்வி எழுப்பிய முதல்வர், ஐடி ஊழியர்கள், பஃப்கள் தொடங்க வலியுறுத்தி வருகிறார்கள் என்றும், அவர்கள் வார இறுதி நாட்களை கழிக்க விரும்பும்  “இதுபோன்ற பப்கள் இல்லாதது எங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட ஒரு பெரிய விமர்சனமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை கேரள அரசு தீவிரமாக கவனித்து வருகிறது.” என்று கூறினார்.

மேலும், மாநிலத்தில் கேரள பானங்கள் கார்ப்பரேஷன் (பெவ்கோ) சார்பில் விற்பனை செய்யப்படும் மதுபான நிலையங்களை புதுப்பிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும்,  இந்த விற்பனை நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைககளில் நின்று மக்கள் மதுபானங்கள் வாங்குவதை தவிர்ப்பதற்காக, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மது வகைகளை எடுக்கக்கூடிய சூப்பர் மார்க்கெட் பானியிலான  மதுபான விற்பனை நிலையங்களையும் அமைப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என்றார்.

இதற்கு தேவையான மதுபானங்கள், தமிழ்நாட்டின் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மற்றும் கர்நாடகா போன்றவற்றில் சிறப்பு விற்பனை நிலையங்களில் இருந்து மதுபானம் வாங்க முடியும் என்று கூறி உள்ளார்.

பினராயி தலைமையிலான கேரள அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏற்கனவே முந்தைய அரசு கொண்டு வந்த கடுமையான மதுபானக் கொள்கையிலிருந்து மாறியது. அதன்படி, முதல்கட்டமாக  5 நட்சத்திர ஹோட்டல் களுக்கு மட்டுமே மதுபான உரிமங்களை அனுமதித்தது. இதன் காரணமாக, மாநிலத்தில்  700 க்கும் மேற்பட்ட ஹோட்டல்களின் பார் உரிமத்தை இழக்க வழிவகுத்தது. இது மாநில அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, பின்னர்,   மூன்று மற்றும் 4 நட்சத்திர ஹோட்டல்களில் இந்திய தயாரிப்பு மதுபானங்கள், பீர் போன்றவை  விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. பின்னர், உணவகங்கள் / பார்களுக்கும் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.