வல்லரசை விட நல்லரசே தேவை!: நடிகர் விஜய்

சென்னை,

நாடு வல்லரசாவதைவிட நல்லரசாக இருக்க வேண்டியதே அவசியம் என நடிகர் விஜய் பரபரப்பாக பேசினார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஜய், நாட்டில் தற்போது நிலவி வரும் விவசாயிகள் பிரச்சினை குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

அப்போது, முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும், வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்  என்றால். மேலும்,  நாம் நன்றாக இருக்கிறோம் ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை என்றும்,
நமக்க  3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டது, இதே நிலை நீடித்தால்,  அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்படும் எனவும் கவலை தெரிவித்தார்.

அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள், இன்று இலவச அரிசி பெற ரேஷன் கடையில் வரிசை யில் நிற்கும் கொடுமை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட எனவும் முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும்.  வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் விஜய்-ன் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே நடிகர் ரஜினி, நாட்டில் சிஸ்டமே சரியில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்யும்  விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.