புதிய பாக். தளபதியிடம் கவனமாக இருங்கள்: முன்னாள் இந்திய ராணுவ தளபதி

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள ஜெனரல் கொமர் ஜாவெத் பஜ்வாவிடம் எச்சரிகையாக இருங்கள். அவர் மிகுந்த அனுபவமும் திறமையும் வாய்ந்தவர் என்று முன்னாள் இந்திய ராணுவ தளபது பிக்ரம் சிங் மத்திய அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

bajwa

ஐ.நா சார்பாக சென்ற மீட்பு படையில் தளபதி பிக்ரம் சிங் ஜெனரல் ஜாவெத் பாஜ்வாவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஜெனரல் பாஜ்வா ஒரு அசாத்திய திறமைசாலி, கொடுத்த வேலையை கனகச்சிதமாக முடிக்ககூடிய திறன் படைத்தவர். அவரிடம் இந்திய அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி அவர் இந்திய பாகிஸ்தான் எல்லை விவகாரங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்.

அதே நேரத்தில் ஜெனரல் பாஜ்வா உள்நாட்டில் வளர்க்கப்படும் தீவிரவாதத்துக்கு எதிரான கொள்கை கொண்டவர் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும் என்றும் முன்னாள் இந்திய ராணுவ தளபது பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.

You may have missed