சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை : தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இதில் ரமேஷ் கண்ணா , சிவகார்த்திகேயன் , ரோபோ ஷங்கர் உள்ளிட்டோருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் வாக்களிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் சிறிது நேரத்திலேயே நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்களிப்பது உங்கள் உரிமை என்று மையிடப்பட்ட தனது ஆள்காட்டி விரலை காட்டிய படி உள்ள புகைப்படத்தை பகிர்ந்தார்.

இது சமூகவலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.