ஆசிய விளையாட்டு: ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

ஜகர்த்தா:

ஆசிய விளையாட்டில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நிரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.